2025 மே 08, வியாழக்கிழமை

கொரோனா சடலத்துடன் வான் விபத்து: பொலிஸ் அதிகாரி பலி

Editorial   / 2021 ஜூன் 05 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் எஸ்.சதீஸ்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று (05)  காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப- பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

ஹட்டனிலிருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக, கொரோனா சடலம் கொண்டுச் சென்ற வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த கொரோனா சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்படவிருந்தது.

உப- பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம், வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்துடன் சென்ற உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

வாகனம் வலுக்கி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவித்த ஹட்டன், வட்டவளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X