2025 மே 05, திங்கட்கிழமை

கொழும்பிலிருந்து கலஹா வந்தவருக்கு கொரோனா

Gavitha   / 2020 நவம்பர் 15 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா - வீசந்திரமலை பகுதியில், நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கடந்த 9ஆம் திகதி, கலஹாவுக்கு வந்த இளைஞர் ஒருவருக்கே, இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவருடன் தொடர்பில் இருந்தவர்கள், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த இளைஞன், புறக்கோடை்டை 4ஆம் குறுக்கு வீதியுள்ள கடையொன்றில் பணியாற்றிய நிலையில், அங்கிருந்த கடந்த 9ஆம் திகதி பேலியகொடவுக்கு வந்து, அங்கிருந்து லொறி ஒன்றின் மூலம், பேராதெனியவுக்கு வந்து, அங்கிருந்து ஓட்டோ ஒன்றின் மூலம், கலஹாவுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி இவ்விளைஞனுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, இவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (15) உறுதி செய்யப்பட்டது.

இவர், பொல்கொல்ல வைத்தியசாலைக்கு சுகாதார பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X