2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கோதுமை மா நிவாரணம் நடைமுறையில் சாத்தியப்பட வேண்டும்

R.Maheshwary   / 2022 ஜனவரி 05 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி அமைச்சரால் முன்மொழியப்பட்டுள்ள பெருந்தோட்ட பகுதிகளுக்கான  கோதுமை மா சலுகை, நீரின் மேல் எழுதப்பட்ட வாசகம் போல் அமையாமல் நடைமுறையில் சாத்தியப்படல் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் பெருந்தோட்ட மலையக மக்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக கோதுமை மா விலை ஏற்றம் பெருந்தோட்ட மலையக மக்களைப் பொறுத்தவரை ஒர் பேரிடியாகும்.

பெருந்தோட்ட மலையக மக்களின் வாழ்வாதார செலவு, அவர்களுக்கு கிடைக்கப்பெறும் ஊதியம் என்பவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, வரவுக்கு மிஞ்சிய செலவே அங்கு காணப்படுகின்றது.

ஆகவே, அவர்களுக்கு நிவாரணம் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பது தன்னுடைய நிலைப்பாடாக ஆரம்பம் முதலே காணப்பட்டது என தெரிவித்த அவர்,

  இந்த சூழ்நிலையில் நிதி அமைச்சரால் முன்மொழியப்பட்டுள்ள கோதுமை மா சலுகை வரவேற்கத்தக்கது .இருப்பினும் அது கட்டாயமாக நடைமுறையில் சாத்தியப்பட வேண்டும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X