2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

Gavitha   / 2015 நவம்பர் 29 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்,ரஞ்சித் ராஜபக்ஷ

 

கடந்த 19ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த பெண்ணொருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நோட்டன் பிரிஜ், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, காசல்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.

காசல்ரீ பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி, காதல் விவகாரம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியிருந்தார் என்றும் அவரைத் தேடித்தருமாறும் பெண்ணின் தாயார் ஏற்கெனவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்துள்ளார்.

தற்போது, சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .