2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குப்பைகளை எறிந்த 15 பேர் கைது

Kogilavani   / 2017 மார்ச் 30 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்  ஆஸிக்

கண்டி -மாத்தளை ஏ- 09 வீதியில் வாகனங்களில் பயணிக்கும்போது குப்பைகளை எறிந்துவிட்டுச் சென்ற  15 பேரை, சந்தேகத்தின் பேரில், கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான பாதையான ஏ -09 வீதியில், வாகனங்களில் பயணிப்போர், குப்பைகளை எறிந்துவிட்டுச் செல்வதாக பரவாக இடம்பெற்று வந்தது. இதனால், சுகாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

எனவே, இதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைவாக,  கண்டி-மாத்தளை ஏ9 வீதியில் பல இடங்களில், சீசீடிக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றின் உதவியுடனயே, மேற்படி 15 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஏ -09 வீதியிலும்  சூழவுள்ள ஏனைய வீதிகளிலும் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக, தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கண்டி பொலிஸார் மேலும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .