2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

குப்பைகளை கொட்டாதீர்: ஏழ்காமம் மக்கள் எதிர்ப்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அக்குறணை பிரதேச சபையால் கொம்போஸ் உரம் தயாரிப்பதற்காக கொட்டப்படும் குப்பைகளால் தாம் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் இதனை உடனடியாக நிறுத்துவற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியும்   அலவத்துகொடை, ஏழ்காமம் மக்கள், இன்று  (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவதால் ஏழ்காமம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் எழுந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் அக்குறணை பிரதேச சபையின் செயலாளர் பீ.எல்.ராஜபக்ஷவிடம் வினவியபோது, 'கொம்போஸ்ட் தயாரிக்கும் சாலைக்கு குப்பைகள் அதிகம் சேர்வதனால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வாக இத்திட்டத்தை விருத்திசெய்யும் வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது'  என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .