Sudharshini / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா, அப்புகஸ்தனை தோட்டத்தில் காலாவதியான திரிபோச பக்கட்டுகள், குழந்தைகளுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் விநியோக்கிக்கப்பட்டமை தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதியுடன் காலாவதியான திபோச பக்கட்டுகளை 27ஆம் திகதி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, இவ்விடயம் தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும், அப்பிரிவுக்கு வைத்திய அதிகாரிகள் விஐயம் செய்து களஞ்சியசாலைகளை பரிசோதனை செய்து, கலவதியான நிலையிலுள்ள அனைத்து திரிபோசவையும் அழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வியடம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago