2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கொஸ்லாந்தையில் இருவர் கைது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை, கொஸ்லாந்தை பகுதியில் இருவேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் செவ்வாய்க்கிழமை(27) கைதுசெய்துள்ளனர்.

பண்டாரவளை, கொஸ்லாந்தை மித்தெனியாய பிரதேசத்தில் கட்டுத்துப்பாக்கிகள் இரண்டை தன்வசம் வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  கொஸ்லாந்தை -கொலம்பகேஹார பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொஸ்லாந்தை- நேவிஆர பிரதேசத்தில் திடீரென மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஒருதொகை கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .