Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 06 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
கேகாலை, அன்னாசிகல பிரதேசத்தில் அரியவகையான (இறந்த) சங்கை விற்பனை செய்வதற்கும் அதனைக் கொள்வனவு செய்வதற்கும் முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா 60 ஆயிரம் ரூபாய் என்றடிப்படையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை, பன்னம்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 23 வயதான அவ்விருவரும் கேகாலை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆம் திகதியன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்போதே நீதவான் மேற்கண்டவாறு அபராதத்தை விதித்தார்.
அரியவகையான சங்கை விற்பனை செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் இவ்விருவரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago