2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சடலமாக மீட்கப்பட்ட மாணவனின் உடலில் போதைப்பொருள்

R.Maheshwary   / 2022 மார்ச் 15 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் சதீஸ்

இந்த மாதம் 12ஆம் திகதி, பொகவந்தலாவை- செல்வகந்தை தோட்டத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவனின் உடலில் போதைப் பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் உடலில் அதிகளவிலான  மாவா என்ற புகையிலை தூள் கலந்திருப்பதாக  டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி இனோக்கா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சடலம் மீதான  பிரேத பரிசோதனையின் போது,குறித்த மாணவன், 12ஆம் திகதி காலையில் இருந்து எவ்வித உணவினையும் உட்கொண்டிருக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

பொகவந்தலாவை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்தவாரம்  நடைபெற்ற  கிரிக்கெட் போட்டியைப்  பார்வையிடுவதற்காக, 12ஆம் திகதி காலை மைதானத்துக்குச் சென்ற குறித்த மாணவன்,  மறுநாள் 13ஆம் திகதி  அதிகாலை மூன்று மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் காலை 8 மணிக்கு நித்திரையில் இருந்து எழும்பிய அவர், தோட்டத்திலுள்ள கிணற்றுக்கு அருகில் சென்று அமர்ந்திருந்தவாறு மயக்கமடைந்த நிலையில் குறித்த கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X