Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்
நோரவூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா, இன்ஞஸ்ரீ தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து, மக்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்த மூவரை, பொலிஸார் நேற்று(6) மாலை கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரனவீர தலைமையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதன்போது, மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்.
புளியாவத்தை இன்ஞஸ்ரீ தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

29 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
47 minute ago