Editorial / 2018 மே 06 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை, பஸ் தரிப்பிடத்திற்கு, அருகில், அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத தற்காலிக வியாபார நிலையங்கள் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளரால், இன்று காலை பொலிஸில் (06) முறைப்பாடு செய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இதேவேளை, குறித்த சட்டவிரோத தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றுமாறு நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளரினால், அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத தற்காலிக வியாபார நிலையங்கள் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. .
குறித்த தற்காலிக வியாபார நிலையங்களை, அமைப்பதற்கு நோர்வூட் பிரதேச சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடமெனவும் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய, பொகவந்தலாவை பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
23 minute ago
24 minute ago
44 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
44 minute ago
4 hours ago