Editorial / 2021 நவம்பர் 05 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அயல் குடும்பத்திற்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
19 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
1 hours ago