2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சந்தோஷ் ஜாவை சந்தித்தார் ஜீவன் தொண்டமான்

Editorial   / 2025 மே 13 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜாவை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில், திங்கட்கிழமை (12) மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது.    இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜாவுடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தேன்.

மேலும் எமது சமூகத்திற்கான நீண்டகாலமான நட்பு மற்றும் அர்ப்பணிப்புக்குகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X