Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
“கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்துவரும் சுமார் 35,000 முதியோரை கருத்திற்கொண்டு, இரு மாவட்டங்களிலும் 28 முதியோர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனூடாக, கிராமிய மட்டத்தில், 1,118 முதியோர் சங்கங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று, கேகாலை மாவட்ட மேலதிகச் செயலாளர் சமன் அருண தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்தில் வாழும் மொத்த சனத்தொகையில், நூற்றுக்கு பதினெட்டு சதவீதம், முதியோர் உள்ளனரென்றும் அவர் கூறினார்.
சப்ரகமுவ மாகாண சமூகசேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில், கேகாலை நகர சபை மண்டபத்தில், திங்கட்கிழமை நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் கூறிய அவர்,
“முதியோர்களது நலன்கருதி, பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“இந்நிலையில், மாகாண சபையின் மூலம் நடத்தப்பட்ட சிறந்த முதியோர் இல்லத்துக்கான போட்டியில், முதலாம் இடத்தை பலாங்கொடை சாந்த ஜோசப் முதியோர் இல்லமும் இரண்டாம் இடத்தை கேகாலை விக்ரமசிங்க முதியோர் இல்லமும் மூன்றாம் இடத்தை கலவான மௌபிய முதியோர் இல்லமும் பெற்றுக்கொண்டுள்ளன” என்றார்.
முதியோர் தின நிகழ்வில், சப்ரகமுவ மாகாண சமூகசேவைகள் அமைச்சின் செயலாளர் டி.எம்.மாலணி, கேகாலை மாவட்ட மேலதிகச் செயலாளர் சமன் அருண மற்றும் கேகாலை மாவட்டச் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
1 hours ago