2025 மே 05, திங்கட்கிழமை

சமூக இடைவெளியில் சிக்கல்

Gavitha   / 2020 நவம்பர் 23 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சதீஸ்

மலையகத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும், இன்று (23), சுகாதார பாதுகாப்புடன், தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் 3ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.

மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி அச்சமின்றி வழமைபோல் பாடசாலைகளுக்கு வந்திருந்தாலும், மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது என ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

மாணவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் வந்ததும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை கழுவிய பின்னர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்றும் வகுப்பறையில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன என்றும் எனினும், ஒரு சில பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை காரணமாக, இந்த இட ஒதுக்கீடு மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள, ஹட்டன் வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயம்,  ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் இன்று (23) திறக்கப்படவில்லை. 

இப்பகுதிகளில் நேற்று  (22) கொரோனா தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே இப்பாடசாலைகள் திறக்கப்படவில்லை. அத்துடன், இப்பகுதிகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களை வீட்டில் இருந்தே கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X