Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
லிந்துல சமூர்த்தி வங்கியில் முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு தகுதியான சிரேஷ்ட பிரஜைகள் டயகம, அக்கரப்பத்தனை மன்றாசி உள்ளிட்ட பிரதேசத்திலிருந்து 21 கிலோமீற்றர் தூரம் செல்ல
வேண்டியுள்ளது.
போக்குவரத்துக்கு அதிக பணம் செலவு செய்து இக்கொடுப்பனவை பெற்றுக் கொள்ள சென்றாலும் சமூர்த்தி காரியாலயத்தில் தொழில் புரியும் அதிகாரிகள் மற்றும் கள உத்தியோகஸ்தர்களின்
நடவடிக்கைகளால் பயனாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
பார்வை குறைந்தவர்கள், நோயாளர்கள் நடக்க முடியாதவர்கள் அனைவரும் சமூர்த்தி வங்கி சேவையினை பெற்றுக்கொள்ள வருகின்றனர். அந்தவகையில் காலை முதல் மாலை வரை வீதிகளில் அமர்ந்து பசி பட்டினியுடன் காத்திருப்பதோடு தாகத்தை தீர்ப்பதற்கு குடிநீர் வசதியும்
இல்லையென சுட்டிக்காட்டுக்கின்றனர்.
சில அதிகாரிகள் மக்களை தரை குறைவாக பேசுவதாக பயனாளிகள் கூறுகின்றனர். வங்கியில் வழங்கப்படும் பணத் தொகையை எவ்வளவு என்று கேட்டாலும் அதற்கு சரியான பதில் கூறாமல் ஆக்ரோசத்துடன் பேசி மனநோகும்படி நடந்து கொள்வதாக இவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசாங்க உத்தியோர்கள் மக்களுக்கு அரச சேவைகளை சரியான முறையில் வழங்குவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள் அதனை மக்களுக்கு சரியாக வழங்காமல் நாங்கள் அரச அதிகாரிகள் எதனையும் செய்யலாம் எங்கு சென்று முறையிட்டாலும் அதை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்று அதிகாரிகள் கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என பயனாளிகள் கூறுகின்றனர்.
இங்கு காணப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து அமர்ந்திருந்து கொடுப்பவை பெற்றுக் கொள்வதற்கு வசதி வாய்ப்புகளை செய்து தருமாறு அதிகாரிகள் தம்மை இழிவாக
வழிநடத்தாமல் மனிதநேயத்துடன் தமக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும். உதவிகளை வழங்க வேண்டுமென பிரதேச மக்கள் சமூர்த்தி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர். R
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago