2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சமையல் எரிவாயு சிலிண்டரை அதிக விலைக்கு விற்றவர் சிக்கினார்

R.Maheshwary   / 2022 ஜூன் 21 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

பதுளை- ஹாலிஎல   போஹாமலித்த   பகுதியில்  அதிக விலைக்கு  எரிவாயு  சிலிண்டர்களை  விற்பனைச் செய்த குற்றச்சாட்டில்  ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதான ஒருவரே இன்றைய தினம் (21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பதுளை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள், மற்றும்   ஹாலி எல  பொலிஸார்   இணைந்து, நடத்திய   சோதனை நடவடிக்கையில்    சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து    18   எரிவாயு  சிலிண்டர்கள் கைபற்றியதாக  பொலிஸ்  தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட  சந்தேக நபரை  பதுளை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்  நடவடிக்கைகளை  ஹாலிஎல  பொலிஸார்,  மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X