2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

சமையல் எரிவாயு விநியோகத்தில் அமைதியின்மை

Freelancer   / 2022 ஜூலை 17 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நுவரெலியா பிரதான நகருக்கு நேற்றைய தினம் (16) லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பின் பின்னர் இரண்டு நாட்கள் வரிசையில் இருந்தவர்களுக்கும், விற்பனை முகவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது .

விற்பனை முகவர் இன்றைய தினம் கூப்பன் முறையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்ததன் பின்னர் கூப்பன் இன்றி வரிசையில் காத்திருந்தவர்களுக்கும் விற்பனை முகவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது 

எனினும் இதன்போது நுவரெலியா பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கம் இடம்பெற்றது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X