Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 நவம்பர் 16 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.பிரபா
இலங்கையின் பெருந்தோட்டங்களில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர்களின் சம்பளம் 30 சதவீதத்தினால் உயர்த்தப்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொருளாளர் தெரிவித்தார்.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் என்பனவற்றுக்கு இடையில் குறித்த கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தோட்ட சேவையாளர் சங்க பொருளாளர் மாரிமுத்து சுதாகர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 25 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் எனவும், மிகுதி 5 சதவீதம் 2024ஆம் ஆண்டில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வருடாந்த சம்பள உயர்வை வருடத்திற்கு ஆகக் குறைந்தது 100 ரூபாவால் அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உத்தியோகத்தர்களின் ஏனைய நலன்புரி விடயங்களும் உள்ளடக்கப்பட்டே ஓப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்தாகவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பெருந்தோட்ட உத்தியோகத்தர்கள் 70 சதவீத சம்பள அதிகரிப்பை கோரியிருந்த போதிலும், 30 சதவீத அதிகரிப்பிற்கே இணக்கம் காணப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
7 minute ago
9 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 hours ago
15 Aug 2025