2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதீஸ்

சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவ கொட்டியாக்கலை தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (20) தொழிற்சாலைக்கு முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்ப்பிரிவு, மேற்பிரிவு, மத்தியப்பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்கள் இந்த  கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத் தருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் கூறியிருந்தனர். ஆனால், கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து சுமார் 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும் மலையக அரசியல்வாதிகள் மௌனம் சாதித்து வருகின்றனர்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்காவிட்டால் போராட்டம் தொடருமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .