2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சரிந்த குப்பை மேட்டில் மோதிய ரயில்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 24 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 ஹட்டன் ரயில் நிலையத்தை அண்மித்த  ரயில் பாதையில் இன்று (24)  பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததாக ஹட்டன் ரயில் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் ஹட்டன் ரயில்  நிலையத்திற்கு அருகாமையிலேயே இந்த குப்பைகள் அடங்கிய மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக நானுஓயிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சரக்கு ரயில் மண் மேட்டில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

ரயில் பாதையில் இடிந்து விழுந்த குப்பை மேட்டை ரயில் பராமரிப்பு பணியாளர்கள் அகற்றியதன் பின்னர், காலை 08.30 மணியளவில் மலையக ரயில் சேவை மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X