R.Maheshwary / 2022 மார்ச் 08 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நுவரெலியா – லிந்துலை நகரில் இன்று (8) விழிப்புணர்வு ஊர்வலமும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
லிந்துலை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் தொண்டு நிறுவனங்களும் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், தாதிகள், பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
“பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்”, “இளம் வயதில் கர்ப்பம் தரித்தலை தவிர்ப்போம்”, “பெண்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
லிந்துலை வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம் லிந்துலை நகரம் வரை சென்று, அங்கு பெண்களின் முக்கியத்துவம் தொடர்பாக ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.


5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026