Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 22 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி பெருமாள்
ஹட்டன் இ.போ.ச டிப்போ மூலம், சாமிமலை நகரில் இருந்து கண்டிக்கு முன்னெடுக்கப்பட்டு வந்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டதால், பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த பஸ் கடந்த 60 வருடங்களாக சாமிமலை நகரிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து, சாமிமலை, மஸ்கெலியா, நோட்டன், கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கம்பளை, பேராதைனை ஊடாக கண்டி வரை சேவையில் ஈடுபட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக இச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள், நாவலப்பிட்டி மற்றம் கண்டி வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளிகளும் அதிக பயனைப் பெற்று வந்ததுடன், இச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,இந்த பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
20 minute ago
30 minute ago