Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 04 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு, செ.திவாகரன்
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்களின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர் ஒருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு, கைகலப்பில் முடிந்துள்ளது.
இதில், காயமடைந்த மூவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர் .
நுவரெலியா, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், நுவரெலியா -இராகலை தனியார் பஸ் சாரதியிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இ.போ.ச சாரதியும், நடத்துனரும் காயமடைந்தனர்.
மற்றும், இதேவீதியில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றின் ஊழியர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
நில்தண்டஹின்ன சந்தியில், ஞாயிற்றுக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது. இதனால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நுவரெலியாவில் திங்கட்கிழமை (04) தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் மூவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தாக்கிய மூவர் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் முரண்பாடுக்கு பிரதானமாக செயற்பட மேலும் மூவரை கைது செய்ய கோரியும் தாக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழித்தட அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த பகிஷ்கரிப்பு காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராகலை மற்றும் நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025