Janu / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை ஜயமாலாபுர பிரதேசத்தில் பேருந்தில் பயணித்த நபரை வாளால் தாக்கி கடத்திச் சென்ற ஒரு பெண் உட்பட ஐவரை கொழும்பு பகுதியில் வைத்து பழங்கால வாள் மற்றும் வேனுடன் கைது செய்யப்பட்டதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 24ம் திகதி கொத்மலை மாவெலயில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் ஏறிய ஹேமந்த ராஜபக்ஷவை கத்தியால் தாக்கி கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் கம்பளை பொலிஸாரால் கொழும்பு பகுதிக்கு சென்று பல்வேறு இடங்களில் சந்தேகநபர்களை கைது செய்ததுடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் வாள் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பிட்ட வாளுக்கு புராதன மதிப்பு உள்ளதா என தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
நவி
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago