2025 மே 15, வியாழக்கிழமை

சாரதி இன்றி இயங்கிய ட்ரெக்டர் ஓடைக்குள் பாய்ந்தது

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 06 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ட்ரெக்டர் ஒன்று  ஓடைக்குள் பாய்ந்தில் சாரதி படுகாயமடைந்த சம்பவமானது டிக்கோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா தோட்ட தொழிற்சாலையின் களஞ்சியசாலைக்கு மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற குறித்த டரெக்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, திடீரென தானாக இயங்கி அருகில் இருந்து ஓடைக்குள் கவிழ்ந்துள்ளது.

 இவ்வாறு தானாகவே இயங்கிய ட்ரெக்டரை நிறுத்துவதற்கு சாரதி முயற்சித்த போது படுகாயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .