Freelancer / 2022 நவம்பர் 05 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
புஸல்லாவை - எல்பொட தோட்டப் பகுதியில் இன்று அதிகாலை சிபேட்கோ எரிபொருள் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.பி. துசிந்த (வயது - 43) என்பவரே இதில் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து கம்பளை – புஸ்ஸலாவ எல்பொட தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு தேவையான 6600 லீற்றர் டீசலை வழங்கிவிட்டு, கம்பளை நோக்கி திரும்பும் வழியிலேயே அதிகாலை 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால், வீதியல் ஏற்பட்ட வழுக்கல் தன்மையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த கொள்கலனில் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ – புரட்டொப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago