2025 மே 15, வியாழக்கிழமை

சிறுத்தைக்கு வலை விரித்தவருக்கு சிக்கல்

Freelancer   / 2023 மார்ச் 01 , பி.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஆராச்சி

புளத்கொஹூபிட்டிய  பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இஹல உடுவ பிரதேசத்தில் தேயிலைத் தோட்டத்தில் கம்பி சுருக்கில் சிக்கி, சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.

5 வயதான அந்த சிறுத்தை நேற்று (01) அதிகாலை வேளையில் உயிரிழந்துள்ளது. என புளத்கொஹூபிட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தை மரணமடைந்தமை தொடர்பில், கேகாலை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

மிருக வைத்தியரைக் ​கொண்டு சிறுத்தையின் உடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கையிடுமாறு உத்தரவிட்ட நீதவான், சம்பவத்துடன் தொடர்புடையவர் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .