2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிறுத்தையின் உடலம் மீட்பு

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 01 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

நுவரெலியா-  பீட்றூ தோட்ட  லவர்சிலிப் பிரிவில் நேற்று முன்தினம் (31) மாலை கம்பி வலையில் சிக்கிய  நிலையில் சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹக்கல வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

தேயிலை மலையில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த குறித்த சிறுத்தை 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்றும் தெரிவித்துள்ளனர்.

 உயிரிழந்த சிறுத்தையின் உடலத்தை ரந்தெனிகல கால்நடை வைத்தியப் பிரிவுக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும்  அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .