Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 31 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ், டி.ஷங்கீதன், ஆர.ரமேஸ்
நுவரெலியா, கல்வேஸ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில், சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி, மட்டக் குதிரை (போனி) ஒன்று, நேற்று (30) பகல் உயிரிழந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பகுதியில் அண்மைக் காலமாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதென, பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பகுதிக்கு, இரைதேடிச் சென்ற மட்டக்குதிரையே, இவ்வாறு சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த பகுதியில், பரிசுத்த திரித்துவக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு அமைந்துள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதென, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சிறுத்தையின் ஊடுருவலைத் தடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .