2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

சிறுமிகள் இருவர் பலரால் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம்

Editorial   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதின்ம வயது சிறுமிகள் இருவர் பலரால் பல தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்   சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக பணியக பதுளை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்  என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மூவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக  சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மடுல்சீன பொலிஸார் தெரிவித்தனர்.

15 வயதில் முதலில் பலாத்காரத்திற்கு ஆளான மூத்த மகளுக்கு தற்போது 17 வயது. கொழும்பில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியரிடம் அழைத்துச் சென்ற போதே விடயம் அம்பலமானது.

அதுதொடர்பில்,  பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த சிறுமியும் அவரது சகோதரியும் பல சந்தர்ப்பங்களில் பலரால் பல தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின்படி, இந்த சிறுமிகளின் தாயாருக்கு 32 வயது, அவர்  தற்போது இரத்மலானை பிரதேசத்தில் வசித்து வருகிறார்.

மூத்த மகள் மடுல்சீமையில்  வாடகை வீட்டில் இருந்த போது காதல் உறவில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரால் முதன்முறையாக துஷ்பிரயோகத்திற்கு ஆளானார்.

சந்தேக நபர் இராணுவத்தில் இணைந்து தியத்தலாவ முகாமில் கடமையாற்றும் போது சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

கடந்த காலங்களில் பதுளை, மடுல்சீம பசறை, மொனராகலை ஆகிய இடங்களில் வாடகை வீடுகளில் பிள்ளைகளுடன் தங்கியிருந்த இந்த பிள்ளைகளின் கணவனுக்கு  முதல் திருமணத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளதுடன் அந்த குழந்தையின் தாய், கணவனை விட்டுவிட்டு, இரண்டாவது கணவருடன் சென்றுவிட்டார்.   

தனது நான்கு மகள்கள் பாட்டி மற்றும் தாத்தா வீட்டில் தங்கியிருந்த நிலையில், தாய் வேலை தேடி கொழும்புக்கு சென்றிருந்த  போது, ​​முதல் மகளும் இரண்டாவது மகளும் பலரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

பாலித ஆரியவங்ச


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X