Editorial / 2024 மார்ச் 13 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நானுஓயா பொலிஸ் பிரதேசத்தில் பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 52 வயதான நபரை குற்றவாளியாக இனங்கண்ட, சு நுவரெலியா மேல் நீதிமன்றம், அவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. .
நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இந்த தீர்ப்பை புதன்கிழமை (13) வழங்கினார்.
நானு ஓயா பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர், பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுக்கு குறைவான பாடசாலை சிறுமி ஒருவரை 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பாடசாலை ஊடாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து குறித்த நபருக்கு எதிராக நானு ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பிலான வழக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு எதிரான சாட்சியங்களின் அடிப்படையில் 52 வயதான நபர் நீதிமன்றத்தின் ஊடாக குற்றவாளியாக இனங்காணப்பட்டார். .
அதேநேரத்தில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்த தொகையை வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அத்துடன் குற்றவாளி நீதிமன்ற தண்ட பணமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இந்த தண்டனை பணத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
6 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago