Freelancer / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா - சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இருவருக்கும் ஏற்பட்ட காதல் உறவால், அந்த சிறுமியை இளைஞன் துஷ்பிரயோகம் செய்து உள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரைக்கு இணங்க உதவி அதிகாரி ஜ.பி.நுவான், சார்ஜன் சந்திரசேன மற்றும் பெண் பொலிஸ் பாக்கியா ஆகியோர் இளைஞனையும் மாணவியையும் கைது செய்தனர்.
மாணவியை கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.
இளைஞன் ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். R
8 minute ago
22 minute ago
34 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
34 minute ago
44 minute ago