R.Maheshwary / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
வட்டவளை - டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தில் உள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹைட்றி தோட்ட உள்ள விகாரையின் பிக்குவை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதிமன்ற நீதவான் அசங்கா ஹெட்டிவத்த இன்று (23) உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றதாகவும், 21ஆம் திகதி குறித்த சிறுவனின் தந்தை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்ததாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, 21ஆம் திகதி மாலை வட்டவளை பொலிஸாரால் பிக்கு கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேற்படி சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், பிக்குவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என பொது மக்களால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று (23) பிக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த பிக்குவை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
6 minute ago
15 minute ago
21 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
21 minute ago
27 minute ago