R.Maheshwary / 2022 ஏப்ரல் 19 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஒரு தொகை சமையல் எரிவாயு சிலிண்டர்களை தமது வீட்டில் சேகரித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர் ஒருவருக்கு, 10,000 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
கினிகத்தேனையைச் சேர்ந்த 50 வயதான சந்தேகநபர், நுவரெலியா நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் இன்று (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரிடம் 10,000 ரூபாய் அபராத தொகையை அறவிடுமாறு நீதவான் பருக்டீன் உத்தரவிட்டுள்ளார்.
அபராத தொகைக்கு மேலதிகமாக சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 12.5 கிலோ நிறையடைய 177 சிலிண்டர்கள், 2.4 கிலோ நிறையுடைய 25 சிலிண்டர்கள், 5 கிலோ நிறையுடைய 28 சிலிண்டர்கள் என்பவற்றை அரசாங்கத்தின் நிர்ணய விலையின் கீழ், நுகர்வோருக்கு விற்பனை செய்து அந்த பணத்தை நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் வெற்று சிலிண்டர்களை சந்தேகநபரிடம் கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
9 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Jan 2026