Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூலை 08 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் பா.சிவநேசனுக்கு எதிராக, பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில், நேற்று (07) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மாடசாமி சரோஜாவாலேயே, இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தன்னை, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசினாரெனக் கூறியே, இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவராக இருந்து, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட பா.சிவநேசன், லெச்சுமி மத்திய பிரிவுத் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பற்றி விமர்சித்ததாகவும், எனினும், “அவ்வாறு ஏன் விமர்சித்தீர்கள்?” என்று தான் வினவியபோதே, தன்னை தகாத வார்த்தைகளால் அவர் திட்டினாரெனவும், சரோஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பிரதேச சபை உறுப்பினர் சரோஜாவின் வீட்டுக்கு முன்னால் கூடிய தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டும், கற்களை எறிந்தும் குழப்பம் விளைவித்தனர் என்றும், இதையடுத்து, அவரது வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு, பிரதேச சபை உறுப்பினர் பா.சிவநேசன் மறுப்புத் தெரிவித்துள்ளார். லெச்சுமி தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தான் சென்றது உண்மை என்றும் ஆனால், அங்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினரைச் சந்திக்கவில்லை என்றும், அவருடன் கலந்துரையாடவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மீது சேறு பூச முயலும் செயலாகவே தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025