2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சிவனைத் தரிசிக்க போதையில் சென்ற யுவதிக்கு அபராதம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 22 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

மதுபோதையில் காரை செலுத்தியவாறு, சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, யுவதியிடம் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரமும் 3 மாதங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.

  சந்தேகநபர் நல்லதண்ணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று  (21) ஹட்டன் நீதிவான் பரூக்டீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது யுவதி, மேலும் இரண்டு இளைஞர்களுடன் போதையில் வாகனத்தைச் செலுத்திச் சென்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .