2025 மே 15, வியாழக்கிழமை

சிவனொளிபாதமலையில் குவிந்த யாத்திரிகர்கள்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா
இந்த வார இறுதி நாட்களில் பெருமளவான யாத்திரிகர்கள் சிவனொளிபாதமலைக்கு  வருகை தந்ததால், நல்லதண்ணி- சிவனொளிபாதமலை  பிரதான  வீதியில் யாத்திரிகர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.வீரசேகர தெரிவித்தார்.

வார இறுதியில் பாடசாலை விடுமுறைகள் முடிவடைவதற்கு முன்னர் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் வருகைதந்ததாகத் தெரிவித்தார்.


இதனால்  நல்லதண்ணி பிரதேசத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாத காரணத்தினால் நல்லதண்ணி- மஸ்கெலியா வீதியில் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு வீதியோரங்களில் பெருமளவான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 


ரயில் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் மூலம் யாத்திரிகர்களின்  வருகைத் தரும் யாத்திரிகர்களின் இலகுவான பயணத்திற்காக, ஹட்டன் மற்றும் நல்லதண்ணிக்கு இடையில் ஹட்டன் இ.போ.ச  டிப்போ பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .