Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 08 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல்
சிவனொளிபாத மலை பெயர் மாற்று விவகாரத்தில் மஸ்கெலியா பிரதேசசபை, முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தமையினாலேயே பிரச்சனை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, பெயரை மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முடிவை இடைநிறுத்த உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சகல மதத்தினரும் வழிபடும் சிவனொளிபாதமலையின் நுழைவாயிலிருந்த பெயர் பலகை, 'சிவபாதம்' என மாற்றப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த அவர், மத்திய மாகாண ஆளுநர் மேற்கண்டவாறுத் தெரிவித்ததோடு, எந்த தரப்பினருடனும் கலந்துரையாடாது மஸ்கெலியா பிரதேசபையினால் எடுக்கப்பட்ட மேற்படி முடிவால் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன எனக் கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், மஸ்கெலியா பிரதேச சபைக்கு இவ்வாறு தன்னிச்சயான முடிவுகளை எடுக்க முடியாதென்றார்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்டதுபோன்ற இனமுரண்பாடுகளை, மத்திய மாகாணத்திலும் ஏற்படுத்த தான் இடமளிக்கப்போவதில்லை. இனமுரண்பாடுகளை தோற்றுவிக்கும் விடயங்களை நிதானமாக கையால வேண்டுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு சுமுகமான முடிவொன்றை எடுக்க தான் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago