2025 மே 17, சனிக்கிழமை

சீதையம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக்கும் தீர்மானம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே. குமார்

நுவரெலியா- சீ்த்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் ஒன்று, நுவரெலியா பிரதேசசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேசசபையின் டிசெம்பர் மாதத்திற்கான மாதாந்த கூட்டம்  நுவரெலியா பிரதேசசபை தவிசாளர்  வேலு யோகராஜா தலைமையில்  நடைபெற்ற போது,  ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தை புனித பூமியாக பிரகடனம் படுத்தும்  தீர்மானத்தை தவிசாளர் வேலு யோகராஜா முன்வைத்தார்.

இந்த தீர்மானத்தை ஆளுங்கட்சி உறுப்பினர் எம். இராமஜெயம் வழி மொழிந்தார். இந்த தீர்மானம் எந்தவித எதிர்ப்புமின்றி ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .