R.Maheshwary / 2022 மே 31 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
மலையகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவும் சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் கடும் குளிர் காற்று காரணமாக தோட்டங்களில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வருகை குறைந்துள்ளன.
இதே வேளை நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி வருவதனால் காசல்ரி, மவசாகலை, கெனியோன், லக்ஷபான, விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினால் செயழிலந்து கிடந்த சிறிய நீர் மின் உற்பத்திகளும் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன.
பனிமூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் -கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago