R.Maheshwary / 2022 மார்ச் 15 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு சேவையில் ஈடுபடும், தனியார் பஸ்கள் உரியமுறையில் சேவையில் ஈடுபடாமையால் குறித்த கிராமங்களிலிருந்து நகரங்களிலுள்ள பாடசாலைக்கு வரும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு பாடசாலைகளுக்கு செல்வதில் கடும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாறு காலம் தாமதமாகி பாடசாலைக்கு செல்ல நேரிடும் மாணவர்கள், பாடசாலைகளின் காலை நிகழ்வுகள் நிறைவடையும் வரை பாடசாலை வாயில்களில் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஊவா மாணாத்திலுள்ள பல பாடசாலைகளில் இந்த நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் தமது பஸ்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் கிராமங்களிலுள்ள மாணவர்களையும் ஆசிரியர்களையும் உரிய நேரத்தில் பாடசாலைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
3 minute ago
12 minute ago
18 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
18 minute ago
24 minute ago