2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சீர்திருத்த நிலையத்தில் சிறுவன் ஒப்படைப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அலவத்துகொடையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து, அவ்வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 75,000 ரூபாய் பணத்தை திருடியக் குற்றச்சாட்டின் பேரில் கைதான சிறுவனை (வயது 15), அங்கும்புரயிலுள்ள சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் ஒப்படைக்குமாறு, கண்டி நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான், திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி வீட்டின் உரிமையாளர் செய்த முறைப்பட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், அலைபேசி விற்பனை நிலையமொன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, சிறுவனை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 3 அலைபேசிகள் மற்றும் 30,900 ரூபாய் பணம் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

சிறுவன் அடிக்கடி குறித்த வீட்டுக்குச் சென்றுவருதாகவும் வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்திலேயே, இவ்வாறு திருட்டில் ஈடுபட்டதாகவும், ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுவனை, கண்டி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X