2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சுகாதார மத்திய நிலையம் திறப்பு

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், சுகாதார மத்திய நிலையங்களை அமைக்கும் வேலைத்திட்டம், கனடா அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், இரத்தினபுரி, எலபாத்த பலாவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் சுகாதார மத்திய நிலையம், சனிக்கிழமை மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கனடா அரசின் நிதியுதவியின்கீழ், 10 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்படி சுகாதார மத்திய நிலையத்தில், மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நடமாடும் தாய் சேய் மருத்துவ சேவை உட்பட ஏனைய மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிகழ்வில், அமைச்சர் தலத்தா அத்துகோரள, சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா மற்றும் கனடா நாட்டு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் மானியங்கல, ஹிதுரங்கல, ரஜவக்க ஆகிய மூன்று பிரதேசங்களிலும் 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக சுகாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .