2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சுகாதார வழிகாட்டல்களின் கீழ் வசந்த கால கொண்டாட்டம்

R.Maheshwary   / 2022 மார்ச் 20 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில், வசந்த கால கொண்டாட்டத்தை இந்த வருடமும் ஏப்ரல்  மாதம் முதலாம் திகதி முதல் 30ஆம் திகதி வரை சுகாதார முறைக்கமைய நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் இருந்தும் ஆலோசனைகள் வழங்கப்படுள்ளதுடன், நுவரெலியாவிலுள்ள சகல உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் என்பவற்றுக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்தபடும் எனவும் தெரிவித்தார் 

வசந்த கால நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் , நுவரெலியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார் .

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X