R.Maheshwary / 2022 ஜனவரி 04 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
செவனகல சீனி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு 35 வருடங்களில் 2021ஆம் ஆண்டே அதிக வருமானம் கிடைத்துள்ளதென தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர, இதற்கமைய, கடந்த வருடம் 1.300 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதென்றார்.
செவனகல சீனித் தொழிற்சாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
11 வரடங்களுக்கு முன்னர், குறித்த தொழிற்சாலையை அரசாங்கம் பொறுப்பேற்கும் நடவடிக்கையை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னெடுத்தார். அதன் பின்னர் நல்லாட்சி காலத்தில் எவ்வித முன்னேற்றமும் இன்றி இத்தொழிற்சாலை காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், எனினும் எமது அரசாங்கத்தின் கீழ், கடந்த 2 வருடங்களுக்குள் மிகவும் இலாபகரமான நிறுவனமாக செயற்பட்டு வருகிறது என்றார்.
மேலும் கடந்த வருடத்துக்குள் 3 இலட்சம் மெட்றிக் தொன் கரும்புகள் அரைக்கப்பட்டுள்ளதுடன், 5 மில்லியன் லீற்றர் எதனொல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த சீனி நிறுவனத்தின் 50 சதவீதமான இலாபம் எதனொல் மூலமே கிடைப்பதாகத் தெரிவித்த அவர், கிடைத்த இலாபத்துக்கமைய இதன் பணிளாளர்களுக்கு 30,000 ரூபாயும் விவசாயிகளுக்கு 15,000 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .