2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சேய்க்குப் பின் தாயும் மரணம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயொருவர் சிசுவை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம்  திங்கட்கிழமை (19) பதிவாகியுள்ளது.

 எத்திமலை – கும்புக்கேயா  பிரதேசத்தைச் சே​ர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தனது இரண்டாவது குழந்தையைப் பி​ரவசித்த போதே, உயிரிழந்தள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பி​ரசவத்துக்காக சியம்பலாண்டுவ ஆரம்ப வைத்தியசாலையில் 18ஆம் திகதி  அனுமதிக்கப்பட்ட பின்னர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்ப்பட்டு, அங்கு சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிரசவித்து சிறிது நேரத்தின் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தீவிர சிகிச்சைப் ​பிரிவில் அனுமதிக்கப்பட்ட தாயும் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .