R.Maheshwary / 2022 ஜூன் 05 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் கடந்த 35 வருடகாலமாக தன்னை வளர்த்து கொண்டு, மாற்று கட்சிக்கு தாவி காங்கிரஸின் முன்னால் உப தலைவர்களில் ஒருவரும், கட்சியின் மாவட்ட தலைவருமான கருப்பையா ஜெயராம் மக்கள் செல்வாக்கை இழந்து இப்போது செத்த பாம்பாகிவிட்டார் என காங்கிரஸின் உப தலைவரும் நுவரெலியா பிரதேச சபை தவிசாளருமான வேலு யோகராஜ் கருத்து தெரிவித்தார்.
இவ்வாறு கட்சித் தாவிய,கருப்பையா ஜெயராம் தொடர்பில் அதிர்ப்தி தெரிவித்து வேலு யோகராஜ் இன்று கந்தப்பளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்த தெரிவித்த அவர்,
காங்கிரஸ் என்ற தாய் கட்சியில் கடந்த 35 வருட காலமாக தன்னுடைய கௌரவத்தை வளர்த்துக்கொண்டும் ,சலுகைகளை அனுபவித்து கொண்டும் செயற்பட்ட அவர், தற்போது தாய் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு தாவி காங்கிரஸை விமர்சித்து வருகிறார்.
இவர் என்றைக்கு காங்கிரஸை விட்டு வெளியேரினாரோ அன்றே அவர் செத்த பாம்பாகிவிட்டார் என்றார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago