2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

செயலமர்வு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒருநாள் செயலமர்வொன்று அண்மையில், அனுராதபுரம் உல்லாச விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது, 19ஆவது திருத்தச்சட்டங்களுக்கு அமைய இலங்கையின் புதிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாகாண சபையின் ஆளும்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

செயலமர்வில் இலங்கை நிர்வாக சபையின் பணிப்பாளர் எம்.திலகசிறி, மேல்மாகாண சபையின் முன்னாள் செயலாளர் லலித் கன்னங்கர, மேல்மாகாண சபையின் சட்ட ஆலோசகர் பாலித அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண எதிர்க்கட்சி தலைவர் டபிள்யூ.சோமதாச, மாகாண சபையின் எதிர்க்கட்சி அமைப்பாளர் சிறிபால கிரியெல்ல மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .